வெள்ளப்பெருக்கால் யமுனை பழைய பாலத்தை கடக்கும் ரெயில்கள் புதுடெல்லி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக இருந்தது. இது இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக உயர்ந்தது. இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 206.44 மீட்டராக உயர்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கால் யமுனை பழைய பாலத்தை கடக்கும் ரெயில்கள் புதுடெல்லி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.