உத்தரகாண்ட் - மின்மாற்றி வெடித்து கோர விபத்து - 16 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில், மின்மாற்றி வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அலக்நந்தா நதியை கடக்கும் வகையில் அமைந்துள்ள பாலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நவாமி கங்கை சுத்திகரிப்பு திட்டத்தின் பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து பேசிய சமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “செவ்வாய்க்கிழமை இரவு, மின்சாரம் தாக்கி காவலர் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் […]

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில், மின்மாற்றி வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அலக்நந்தா நதியை கடக்கும் வகையில் அமைந்துள்ள பாலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நவாமி கங்கை சுத்திகரிப்பு திட்டத்தின் பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய சமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “செவ்வாய்க்கிழமை இரவு, மின்சாரம் தாக்கி காவலர் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, 22 பேர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர். அதில் 16 பேர் உயிரிழந்த நிலையில், மற்றவர்களின் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu