போக்குவரத்து சிக்னல் மற்றும் வீடுகளில் யாசகம் பெற மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.
புனேவில் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெறுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு இருப்பதாக புகார் எழுந்து வந்தது. இதனால் போக்குவரத்து போலீசார் இதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். தடையை மீறும் திருநங்கைகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.