ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போதிய ஊதிய உயர்வு, ஓய்வு ஊதியம் ஆகியவற்றை பெற வேண்டும் என்ற ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். தற்போது அரசு தரப்பில் பொங்கலுக்கு பின் பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் இப்போதைக்கு அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் எதையும் தாங்கள் நிராகரிக்கவில்லை பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம் போக்குவரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இப்பது உள்ள சூழலில் எந்த ஒரு நாளிலும் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து சீரான பஸ் இயக்கம் நடைபெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சேம மற்றும் தின கூலி பணியாளர்கள் கட்டாயமாக குறிப்பிட்ட நாள்களில் பணிபுரிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு பணிமனைகளிலும் பஸ்கள் இயக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.