சென்னையில் அக்டோபர் 30 ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுத்துறை ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பை வெளியிட்டார். இதனை அடுத்து போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 20 சதவீத போனஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, அதே நேரம் மீதமுள்ள ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30 ஆம் தேதி மட்டும் சென்னையில் அமர்வு போராட்டம் நடத்த இருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.