காசாவில் இருந்து 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்பு

May 18, 2024

காசாவின் ரபா நகரில் சிக்கி இருந்த 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்கப்பட்டனர். கடந்த வாரம் முதல் ரபா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. அங்குள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சுமார் 4.5 லட்சம் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லை பகுதி மூடப்பட்டது. இதனால் வெளிநாட்டவர்கள் பலர் சிக்கி கொண்டனர். இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க தேசிய […]

காசாவின் ரபா நகரில் சிக்கி இருந்த 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்கப்பட்டனர்.

கடந்த வாரம் முதல் ரபா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. அங்குள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சுமார் 4.5 லட்சம் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லை பகுதி மூடப்பட்டது. இதனால் வெளிநாட்டவர்கள் பலர் சிக்கி கொண்டனர். இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், காசாவில் 20 அமெரிக்க டாக்டர்கள் சிக்கி உள்ளனர். அவர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்தனர். அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர்கள் மட்டும் வந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu