கர்நாடக மாநில அரசு வாடகை கார்களுக்கான பயண கட்டணத்தை மாற்றி புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 2021 இல் ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலி மூலம் வழங்கப்படும் வாகன சேவைகளுக்கும், இதர வாடகை கார் சேவைகளுக்கும் வெவ்வேறு விகிதங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அனைத்து விதமான வாடகை கார் பயண கட்டணங்களும் ஒரே சேவை கட்டணம் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் கிலோமீட்டர் கட்டணம் தவிர ஜி.எஸ்.டி மற்றும் சுங்க சாவடி கட்டணங்களும் சேர்த்து வசூலிக்கப்பட உள்ளன. மேலும் இரவு நேர சேவைகளுக்கு 10% கூடுதலாக வசூலிக்கப்படும். அதேபோல் முதல் ஐந்து நிமிடங்களுக்கு காத்திருப்பு கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை. அதனை தொடர்ந்த ஒவ்வொரு நிமிடங்களுக்கும் ரூபாய் 1 வசூலிக்கப்படும்.இந்த புதிய கட்டண விகிதத்தால் பயணிகள் அதிக தொகை தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.