இன்று பிற்பகலில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, தோடா பிராந்தியத்தில் 5.4 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கு அடியில் 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. மேலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.