மணிப்பூரில் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் வெடித்தது.
மணிப்பூர் மாநிலத்தின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்ற நிலை தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதால், ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் அமைதி உடன்படிக்கையை மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் வன்முறை ஏற்பட்டது. ஜோமி பழங்குடியினர் தங்கள் கொடியை ஏற்றியபோது ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்து மோதல் தீவிரமடைந்தது. கல்வீச்சு, தாக்குதல் உள்ளிட்ட வன்முறையில் 53 வயதான லால்ரோபுயி பாகுமாட்டே உயிரிழந்தார். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு மணிப்பூர் மோதல்களை ஆய்வு செய்ய வருகின்றனர்.














