திருச்சி - பெங்களூர் விமானம் திடீர் கோளாறு

November 16, 2023

திருச்சி- பெங்களூர் செல்லும் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை,பெங்களூர் போன்ற நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மேற்கண்ட விமான நிலையங்களுக்கு வேறு விமான மூலமோ அல்லது தொடர் விமான மூலமோ பயணம் செய்து வருகின்றனர். இதில் இன்று காலை 74 பயணிகளுடன் […]

திருச்சி- பெங்களூர் செல்லும் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை,பெங்களூர் போன்ற நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மேற்கண்ட விமான நிலையங்களுக்கு வேறு விமான மூலமோ அல்லது தொடர் விமான மூலமோ பயணம் செய்து வருகின்றனர். இதில் இன்று காலை 74 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடபட்டனர். மேலும் விமானம் புறப்படும் நேரம் எதுவும் விமான நிறுவனம் தரப்பில் இருந்து அறிவிக்கப்படாத காரணத்தினால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu