ரூ.18 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவிக பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செனாய் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திருவிக பூங்காவின் சில பகுதிகள் எடுக்கப்பட்டன. மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்த நிலையில், பூங்கா ரூ.18 கோடி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மறு சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிவுற்ற நிலையில், நேற்று மாலை இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
பூங்காவில், தொடர் நடைபாதைகள், சறுக்கு வளையம், பூப்பந்து அரங்கு, கடற்கரை கைப்பந்து அரங்கு, கூடைப்பந்து அரங்கு, கிரிக்கெட் வலைப்பயிற்சி, திறந்தவெளி உடற்பயிற்சி, 8 வடிவமைப்புடன் நடைபாதை, சிறுவர்கள் விளையாடுமிடம், திறந்தவெளி அரங்கம், யோகா மையம், உருவச் சிலைகள் மற்றும் படிக்கும் பகுதி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.