பிலிப்பைன்சில் வெள்ளம் - 23 பேர் பலி

October 25, 2024

பிலிப்பைன்ஸில் டிராமி புயல் தாக்கியதில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 23 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு பிலிப்பைன்ஸில் உள்ள இசபெலா மாகாணத்தில் இன்று அதிகாலை டிராமி என்ற புயல் தாக்கியது. இதில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 23 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் மற்றும் கார்கள் நீரில் மூழ்கின. வீடுகளில் சிக்கிய மக்களை மீட்க மோட்டார் படகுகளை மீட்புக்குழுவினர் பயன்படுத்துகின்றனர். மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். […]

பிலிப்பைன்ஸில் டிராமி புயல் தாக்கியதில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 23 பேர் உயிரிழந்தனர்.

வடகிழக்கு பிலிப்பைன்ஸில் உள்ள இசபெலா மாகாணத்தில் இன்று அதிகாலை டிராமி என்ற புயல் தாக்கியது. இதில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 23 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் மற்றும் கார்கள் நீரில் மூழ்கின. வீடுகளில் சிக்கிய மக்களை மீட்க மோட்டார் படகுகளை மீட்புக்குழுவினர் பயன்படுத்துகின்றனர். மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். நாகா நகரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலுடன் கூடிய வானிலை சில பகுதிகளில் தொடருவதால், நிவாரண பணிகள் தடைப்படுகின்றன. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75,400 கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu