குடியரசு கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக அந்த நாட்டின் நியூ ஹாம்ப்ஷைா் மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக அந்த நாட்டின் நியூ ஹாம்ப்ஷைா் மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே அயவ மாகாணத்தில் நடைபெற்ற உள்கட்சி தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்த இரண்டு மாகாண குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்தப் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹோலி தோல்வி அடைந்துள்ளார். எனினும் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் ட்ரம்புக்கு எதிராக இறுதிவரை போராடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். முன்னதாக உள்கட்சி வாக்கெடுப்பில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகியது குறிப்பிடத்தக்கது.