அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் சில மாற்றங்களை அவர் அறிவித்துள்ளார்.
டிரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், மக்கள் பாதுகாப்பை முக்கியமாக பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். வாஷிங்டன் டி.சியில் கடுமையான குளிர்பாடான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், வெப்பநிலை மிகவும் குறையும் என்று தெரிவித்தார். இது மக்கள் மற்றும் காவல்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு சிக்கலாக இருக்கலாம். எனவே, 20ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி கேபிட்டால் கட்டிடத்தில் உள்ள ரோடுண்டா அறையில் நடைபெறும் என தெரிகிறது. 1985ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் இதேபோன்று அதே அறையில் பதவியேற்றார். ஆனாலும், பதவியேற்பு விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் என்றும், அனைத்து நடவடிக்கைகளும் திட்டப்படி நடைபெறும் என்றும் டிரம்ப் உறுதி தெரிவித்தார்.