அமெரிக்காவில் அல்காட்ராஸ் சிறை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, தற்போது சிறைத் துறையில் முக்கியமான நடவடிக்கையாக அல்காட்ராஸ் சிறையை மீண்டும் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் கொடூரமான மற்றும் வன்முறை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் சிறப்பு சிறையாக இருந்த அல்காட்ராஸ், சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. கடந்த 1983ஆம் ஆண்டு இந்த சிறை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது சுற்றுலா தலமாக மாறி, பயணிகள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்காவில் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில், மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை மீண்டும் இச்சிறையில் அடைத்து வைக்க டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.