துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வென்சி தேர்வு - டிரம்ப்

July 16, 2024

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சியின் ஜேம்ஸ் டேவிட் வென்சி என்பவரை டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதற்காக நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பட்லர் நகரில் நேற்று முன்தினம் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவர் […]

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சியின் ஜேம்ஸ் டேவிட் வென்சி என்பவரை டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதற்காக நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பட்லர் நகரில் நேற்று முன்தினம் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவர் காதில் காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் அவருடைய ஆதரவாளர்களில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்தார். சுட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒஹியோ சென்று இருந்த டிரம்ப் அங்கு ஜெனரேட்டர் ஜேம்ஸ் டேவிட் வென்சியை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu