அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப், இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புளோரிடாவில் நடந்த வெற்றி உரையில் அவர் கூறியதாவது: "இந்த வெற்றி புதிய வரலாறு உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் குடியரசு கட்சி சார்ந்த ஒவ்வொரு வாக்காளருக்கும் என் மனப்பூர்வமான நன்றி. என் மனைவி, குடும்பத்தினர்கள், மற்றும் உறுதியான ஆதரவாளர்களுக்கு நன்றி. இந்த ஆட்சியுடன் அமெரிக்கா தனது பொற்காலத்தை அடையப்போகிறது. 47-வது ஜனாதிபதியாக என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. நம்முடைய இயக்கம் மிகவும் வலுவாக நடந்துள்ளது. மேலும் வெற்றியை நாம் எட்டியுள்ளோம். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன். எனது வெற்றிக்கு நம்பிக்கை கொடுத்த மக்களின் நம்பிக்கை வீணாகாது. அமெரிக்கா மகிழ்ச்சியுடன் முன்னேறும்."