அமெரிக்க கார் நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதிக இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தயக்கம் காட்டி வந்த டெஸ்லா, 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட சொகுசு கார்களுக்கு இந்திய அரசு இறக்குமதி வரியை 110%-ல் இருந்து 70%-ஆக குறைத்த நிலையில், விரைவில் இந்திய சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்த எலான் மஸ்க், இந்தியாவில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கான அறிவிப்பை லிங்க்ட்இனில் வெளியிட்டு 13 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளார். இதன் மூலம், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் நுழைவு உறுதி செய்யப்படுவதாக கணிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "இந்தியாவில் ஆலையை தொடங்குவது அமெரிக்காவிற்கு அநீதியாக இருக்கும்" என கருத்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.