அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான முறைகேடு வழக்கில் குற்றவாளியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னர் தன்னை பற்றி ரகசியங்களை மறைக்க நடிகைக்கு 1.3 லட்சம் டாலர் கொடுத்த விவகாரத்தில் ட்ரம்புக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த பண பரிமாற்றத்தை மறைக்க நிறுவன கணக்குகளில் முறைகேடு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில், இவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஒருவர் மீது குற்றவியல் வழக்கில் தண்டனை கிடைப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்த வழக்கில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த விவரங்கள் ஜூலை 11ஆம் தேதி வழங்கப்படும் என்று நியூயார்க் நீதிமன்றம் கூறியுள்ளது.