14 நாடுகளுக்கு அமெரிக்கா உயர்ந்த இறக்குமதி வரி – டிரம்ப் எச்சரிக்கை

July 8, 2025

ஜப்பான் மற்றும் தென்கொரியாவைச் சேர்த்துப் பல நாடுகளுக்கு எதிராக வரியை உயர்த்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார், பதிலடி வந்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஜப்பான், தென்கொரியா, மியான்மர், மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக ஜப்பான், தென்கொரியாவுக்கான வரி 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்த நாடுகள் தங்கள் இறக்குமதி வரியை […]

ஜப்பான் மற்றும் தென்கொரியாவைச் சேர்த்துப் பல நாடுகளுக்கு எதிராக வரியை உயர்த்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார், பதிலடி வந்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜப்பான், தென்கொரியா, மியான்மர், மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக ஜப்பான், தென்கொரியாவுக்கான வரி 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்த நாடுகள் தங்கள் இறக்குமதி வரியை உயர்த்தினால், அமெரிக்காவும் மீண்டும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முடிவை தொடர்புடைய நாடுகளுக்கு கடிதமாக அனுப்பி, அதன் நகலையும் வெளியிட்டுள்ளார். வரிவிதிப்பை தற்காலிகமாக ஜூலை 9 வரை நிறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu