அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த வரிக்குறைப்பு மசோதாவிற்கு செனட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது அவரது அரசியல் தாக்கத்தை அதிகரித்துள்ளது.
‘பிக் பியூட்டிபுல்’ எனக் குறிப்பிடப்படும் வரிக்குறைப்பு மசோதா அமெரிக்க செனட்டில் வெற்றி பெற்றது குறித்து டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்குப் பின்னால் குடியரசுக் கட்சி செனட்டர்களான ரிக் ஸ்காட், மைக் லீ, ரான் ஜான்சன், சின்தியா லுமிஸ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகாது என டிரம்ப் தெரிவித்தார். மசோதாவின் முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்த்து எலான் மஸ்க் பதவி விலகியதும் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.