துனிசியா பிரதமர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்

August 8, 2024

துனிசிய பிரதமர் அகமது ஹச்சாணி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் துனிசியா பிரதமர் அகமது ஹச்சாணியை அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் திடீரென்று பதவி நீக்கம் செய்துள்ளார். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இவருக்கு பதிலாக புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமெல் மதவுரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக துனிசியா அதிபர் அலுவலகம் அறிக்கை தந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அகமது ஹச்சாணி பிரதமராக பதவியேற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் […]

துனிசிய பிரதமர் அகமது ஹச்சாணி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

துனிசியா பிரதமர் அகமது ஹச்சாணியை அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் திடீரென்று பதவி நீக்கம் செய்துள்ளார். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இவருக்கு பதிலாக புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமெல் மதவுரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக துனிசியா அதிபர் அலுவலகம் அறிக்கை தந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அகமது ஹச்சாணி பிரதமராக பதவியேற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கைஸ் சையத் அதிபராக பொறுப்பேற்றார். அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு தான் ஆட்சி செய்வதாக ஆணை மூலம் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கேற்றவாறு 2022 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைத்தார். மாற்றியமைத்த புதிய சட்டத்தின்படி அதிபருக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இருந்தது. தற்போது பிரதமராக பொறுப்பேற்கும் மதவுரி கடந்த மே மாதம் தான் அமைச்சரவையில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu