துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது

February 13, 2023

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது. துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது. இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை […]

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது.

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது. இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் துருக்கியில் 29,605 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிரியாவில் 3,574 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா கணித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu