கடந்த நவம்பர் மாதத்தில், துருக்கி நாட்டின் பணவீக்கம் 84.39% குறைந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், 17 மாதங்களுக்குப் பிறகு, பணவீக்க விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர அடிப்படையில், நுகர்வோர் விலைகள் 2.88% உயர்ந்து வந்ததாக துருக்கி நாட்டு புள்ளியியல் ஆய்வகம் தெரிவிக்கிறது. மேலும், கடந்த அக்டோபர் மாதத்தில் துருக்கி நாட்டின் பணவீக்கம் 24 வருட உச்சமாக 85.51% ஆக பதிவானது. இந்நிலையில், வருடாந்திர அடிப்படையில், நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் 84.65% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், நவம்பர் மாதத்தில், உள்நாட்டு உற்பத்தி விலை குறியீட்டு எண், மாதாந்திர அடிப்படையில் 0.74% ஆகவும், வருடாந்திர அடிப்படையில் 136.02% ஆகவும் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கி, உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை நிறுத்தம் செய்ததே, இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.