துருக்கியில் டெஸ்லா தொழிற்சாலை தொடர்பாக எலான் மஸ்க்- எர்டோகன் பேச்சுவார்த்தை

September 19, 2023

துருக்கியில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக எலான் மஸ்க்- எர்டோகன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.துருக்கிய அதிபர் அமெரிக்காவில் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் எலான் மஸ்க்கை சந்தித்தார். அப்போது இருவரும் துருக்கியில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து துருக்கி அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் துருக்கிய அதிபர் ஏஐ, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வரவேற்பதாக எலான் மாஸ்கிடம் […]

துருக்கியில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக எலான் மஸ்க்- எர்டோகன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.துருக்கிய அதிபர் அமெரிக்காவில் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் எலான் மஸ்க்கை சந்தித்தார். அப்போது இருவரும் துருக்கியில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து துருக்கி அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் துருக்கிய அதிபர் ஏஐ, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வரவேற்பதாக எலான் மாஸ்கிடம் தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது. அப்போது ஸ்டார்லிங்க் வழங்க பாதுகாப்பு தொடர்பாக உரிமை பெற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரும்புவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.இந்த பேச்சுவார்த்தையின் போது டெஸ்லாவின் முதலீட்டுக்கான மிக முக்கிய நாடுகளில் துருக்கியும் ஒன்று என்று நான் தெரிவித்ததாக துருக்கி தொழில்துறை அமைச்சர் கசீர் தெரிவித்துள்ளார் இருவரும் துருக்கியின் ஆயுதமேந்திய வான்வழி ட்ரோன் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினர் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu