சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த டி.வி.எஸ் உடன் அமேசான் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளது.
மின்சார போக்குவரத்து, கட்டமைப்புகள் மற்றும் இணைப்பு சேவைகளை வலிமைப்படுத்த 'அமேசான்' மற்றும் டி.வி.எஸ்., ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. இந்நிலையில், அமேசான் பொருட்களை விநியோகிப்பதற்கு, டி.வி.எஸ்., நிறுவனத்தின் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை உபயோகப்படுத்த உள்ளன.
மேலும், அமேசான் வணிக குழுமத்தின் இணைப்பு மற்றும் தளவாட போக்குவரத்து ஆகியவற்றுக்கு டி.வி.எஸ்., மின்சார வாகனங்களை பயன்படுத்தி இரு நிறுவனங்களும் சோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்குடன் 2030க்குள் அமேசான் நிறுவனம் 1 லட்சம் மின்சார வாகனங்களை உபயோகப்படுத்த இலக்கு வைத்துள்ளது.