டிவிஎஸ் மோட்டார் கம்பெனி விற்பனை 15 சதவீதம் உயர்வு

September 2, 2022

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஆகஸ்ட் மாதத்தில் 15 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் 100 வருட பாரம்பரியம் கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அண்மையில், நரேன் கார்த்திகேயனின் டிரைவ் எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது. தற்போது, நிறுவனத்தின் விற்பனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆகஸ்ட் மாதத்தில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை 333787 ஆக இருந்தது. கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் இது 290694 ஆக இருந்தது. […]

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஆகஸ்ட் மாதத்தில் 15 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் 100 வருட பாரம்பரியம் கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அண்மையில், நரேன் கார்த்திகேயனின் டிரைவ் எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது. தற்போது, நிறுவனத்தின் விற்பனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆகஸ்ட் மாதத்தில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை 333787 ஆக இருந்தது. கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் இது 290694 ஆக இருந்தது. எனவே 15% விற்பனை வளர்ச்சி பதிவாகியுள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனையிலும் 15% வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில் 315539 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. உள்நாட்டு இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 33% வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில் 239325 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. மோட்டார் சைக்கிள் ரக வாகனங்கள் விற்பனையில் 17 சதவிகிதமும் ஸ்கூட்டர் வகையிலான வாகனங்கள் விற்பனையில் 40 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில், 157118 மோட்டார் சைக்கிள்களும், 121866 ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக, நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியில் சரிவு காணப்படுகிறது. மொத்த வாகன ஏற்றுமதி 93111 ஆகவும், இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி 76214 ஆகவும் உள்ளது. அதே வேளையில், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையில் 11% உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் 16381 ஆக இருந்த விற்பனை, தற்போது 18248 ஆக அதிகரித்துள்ளது. மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, டிவிஎஸ் ஐ கியூப் எலெக்ட்ரிக் வாகனம், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில், 649 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்த நிலையில், 2022 ஆகஸ்ட் மாதத்தில் 4418 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu