டிவிஎஸ் நிறுவனம் புதிய ஐகியூப் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும், ஐகியூப் வாகனத்தின் விற்பனை எண்ணிக்கை 3 லட்சம் என்ற இலக்கை தாண்டி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாது என்பதால் மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில், பல்வேறு நிறுவனங்களும் புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன. இருசக்கர வாகன துறையில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம், டிவிஎஸ் ஐகியூப் புதிய மாடல் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 2.2 கிலோ வாட் பேட்டரி திறன் கொண்டுள்ளது. டிவிஎஸ் ஐகியூப் வாகனத்தின் ஆரம்ப விலை 94999 ரூபாய் ஆகும். பல்வேறு வகை பேட்டரி திறன் மற்றும் நிறங்களில் ஐகியூப் வாகனங்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், குரல் வழியாக வழிகாட்டல், டிஜிட்டல் ஆவணங்களை சேமிக்கும் வசதி உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.














