மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஜூபிடர் வாகனத்தை அறிமுகம் செய்தது டிவிஎஸ்

டிவிஎஸ் வாகன நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஜூபிடர் 110 ஸ்கூட்டர் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 73700 ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜூபிடர் வாகனத்தில், ப்ளூடூத் இணைப்பு, குரல் உதவி, மேப் மற்றும் கிரிக்கெட் ஸ்கோர் அறிதல் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் 4 வேரியண்ட்டுகளில், 7 நிறங்களில் வெளியாகி உள்ளது. அத்துடன், இதில் iGo உதவி மற்றும் ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் போன்ற மேம்பட்ட […]

டிவிஎஸ் வாகன நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஜூபிடர் 110 ஸ்கூட்டர் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 73700 ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜூபிடர் வாகனத்தில், ப்ளூடூத் இணைப்பு, குரல் உதவி, மேப் மற்றும் கிரிக்கெட் ஸ்கோர் அறிதல் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் 4 வேரியண்ட்டுகளில், 7 நிறங்களில் வெளியாகி உள்ளது. அத்துடன், இதில் iGo உதவி மற்றும் ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 7.91 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 113 cc இன்ஜின் கொண்ட இந்த ஜூபிடர் வாகனத்தில், 33-லிட்டர் அண்டர்-சீட் சேமிப்பு, எல்இடி விளக்குகள் மற்றும் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகம் 82 kmph ஆகும். ஹோண்டா ஆக்டிவா 6G மற்றும் ஹீரோ Xoom 110 ஆகியவற்றுக்கு நேரடி போட்டியாக இது இருக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu