கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த ஏவுகணை தாக்குதல்களில் கிட்டத்தட்ட 93 பேர் காயமடைந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 15 பேர் பொதுமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பிலும் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்வதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.