டுவிட்டருக்கு புதிய சிஇஓ நியமனம் செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதிய சிஇஓ நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார். நிர்வாகத் தலைவர் என்ற முறையில் எனது பங்களிப்பு மாறும் என பதிவிட்டுள்ளார்.