ட்விட்டர் புளூவில் 2ஜிபி அளவில் 60 நிமிட நீண்ட விடீயோக்களை பதிவேற்றலாம் - அறிவிப்பு

December 23, 2022

ட்விட்டர் புளூவில் இனிமேல் 2ஜிபி அளவில் 60 நிமிட நீண்ட 1080p வெப் ஒன்லி விடீயோக்களை பதிவேற்றலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ட்விட்டர் ப்ளூ பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டரில், 512 எம் பி அளவில் 10 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை மட்டுமே பதிவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க், வீடியோ அறிவிப்புடன் சேர்த்து, ட்விட்டர் பதிவுக்கான பார்வைகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, “ஒரு பதிவு எத்தனை பார்வைகளை பெற்றுள்ளது […]

ட்விட்டர் புளூவில் இனிமேல் 2ஜிபி அளவில் 60 நிமிட நீண்ட 1080p வெப் ஒன்லி விடீயோக்களை பதிவேற்றலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ட்விட்டர் ப்ளூ பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டரில், 512 எம் பி அளவில் 10 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை மட்டுமே பதிவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க், வீடியோ அறிவிப்புடன் சேர்த்து, ட்விட்டர் பதிவுக்கான பார்வைகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, “ஒரு பதிவு எத்தனை பார்வைகளை பெற்றுள்ளது என்பதை, பாலோயர்ஸ் மட்டுமின்றி அனைவராலும் அறிய முடியும். அத்துடன், பதிவேற்றியவரே மீண்டும் அந்தப் பதிவை பார்வையிடும் போது அது மற்றொரு பார்வையாக கணக்கிடப்படும். மேலும், ஒரே நபர் கைபேசியில் ஒரு முறை, கணினியில் ஒரு முறை என ஒரே பதிவை பார்வையிட்டால் இரண்டு முறையும் பார்வை எண்ணிக்கை கணக்கிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu