ட்விட்டரில் இலவச ப்ளூ டிக் சேவை பெறும் நிறுவனங்கள்

April 3, 2023

கடந்த ஏப்ரல் 1ம் தேதியுடன், ட்விட்டர் நிறுவனத்தின் லெகசி ப்ளூ டிக் சேவை நிறுத்தப்பட்டது. மேலும், மாதத்திற்கு 1000 டாலர்கள் தரும் பட்சத்தில், நிறுவனங்களின் ப்ளூ பேட்ச் தக்க வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் தனது ப்ளூ பேட்ச் சேவையை இழந்துள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு, ப்ளூ டிக் சேவையை இலவசமாக வழங்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் அதிகமாக செலவு செய்த 500 விளம்பரதாரர்களுக்கு ப்ளூ டிக் […]

கடந்த ஏப்ரல் 1ம் தேதியுடன், ட்விட்டர் நிறுவனத்தின் லெகசி ப்ளூ டிக் சேவை நிறுத்தப்பட்டது. மேலும், மாதத்திற்கு 1000 டாலர்கள் தரும் பட்சத்தில், நிறுவனங்களின் ப்ளூ பேட்ச் தக்க வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் தனது ப்ளூ பேட்ச் சேவையை இழந்துள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு, ப்ளூ டிக் சேவையை இலவசமாக வழங்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் அதிகமாக செலவு செய்த 500 விளம்பரதாரர்களுக்கு ப்ளூ டிக் சேவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான பாலோயர்களை கொண்டுள்ள நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு, அவற்றில் முதல் 10000 நிறுவனங்களுக்கு இலவச ப்ளூ டிக் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்திற்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைய தொடங்கியுள்ளது. எனவே, விளம்பரதாரர்களை தக்க வைக்க இலவச ப்ளூ டிக் சேவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே வேளையில், மாதம் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் சேவையை பெறுவதில், பல நிறுவனங்கள் ஆர்வத்தை இழந்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu