ட்விட்டரில், நிறுவனங்களுக்கான தங்க நிற டிக் அம்சம் வெளியீடு

March 31, 2023

ட்விட்டரில், சரிபார்க்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தங்க நிற டிக் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, நிறுவனத்தின் லோகோ உடன், அருகில் தங்க நிற டிக் இடம்பெறுகிறது. அரசாங்க நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், லாப நோக்கம் அற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த டிக் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. உரிய சந்தா செலுத்தப்பட்ட பிறகு, ப்ரொபைலுக்கு அருகில், தங்க நிற டிக் மார்க் இடம் பெறுகிறது. மேலும், வணிகம் மற்றும் லாப […]

ட்விட்டரில், சரிபார்க்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தங்க நிற டிக் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, நிறுவனத்தின் லோகோ உடன், அருகில் தங்க நிற டிக் இடம்பெறுகிறது. அரசாங்க நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், லாப நோக்கம் அற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த டிக் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.

உரிய சந்தா செலுத்தப்பட்ட பிறகு, ப்ரொபைலுக்கு அருகில், தங்க நிற டிக் மார்க் இடம் பெறுகிறது. மேலும், வணிகம் மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு சதுர வடிவ அவதார் வழங்கப்படுகிறது. அதுவே, அரசாங்கம் மற்றும் பல்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாம்பல் நிற டிக் மார்க் அல்லது வட்ட வடிவ அவதார் வழங்கப்படுகிறது. இந்தியாவில், இதற்கான சந்தா கட்டணம் மாதத்திற்கு 82300 ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இது தவிர, லோகோ இடம்பெறுவதற்கு, கூடுதலாக, மாதத்திற்கு 4120 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu