ட்விட்டர் நிறுவன பணியாளர்களுக்கு, அதிக பணி நேரம், குறைந்த சலுகைகள் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எலான் மஸ்கின் இந்த கட்டுப்பாடுகள், பணியாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், நவம்பர் 21 ஆம் தேதி வரை பணியாளர்களுக்கு அலுவலகத்திற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ட்விட்டர் எலான் மஸ்கின் வசமான பின்னர், மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, எஞ்சி இருந்த பணியாளர்களும் தாமாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 88% குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.