இந்திய பயனாளர்களுக்கு 3 லட்சம் வரையில் விளம்பர வருவாய் பகிர்வை எலான் மஸ்கின் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்தின் விளம்பர வருவாய் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவிலும் இது தொடங்கப்பட்டுள்ளது. அண்மையில், தங்களுக்கு லட்சக்கணக்கில் விளம்பர வருவாய் கிடைத்துள்ளதாக பல்வேறு இந்தியர்கள் ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்து வந்தனர். அத்துடன், ‘ப்ளூ டிக் சந்தா முறை முழுமையான பைசா வசூல்’ என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, விளம்பர வருவாய் கிடைப்பதற்கான முறைகள் குறித்த தேடலில் அதிக இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.