பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை நீக்க முடிவு

பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளை நீக்க உள்ளதாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவில், “அதிக அளவிலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இதுபோன்ற கணக்குகளை வெளியேற்றி, கூடுதல் இடத்தை பெறுவது அவசியமாகிறது” என்று கூறியுள்ளார். மேலும், பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் ஆர்கைவ் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதே வேளையில், இந்த நடவடிக்கை எப்போது தொடங்கப்படும் என்ற விவரங்களை அவர் பகிரவில்லை. மேலும், […]

பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளை நீக்க உள்ளதாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவில், “அதிக அளவிலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இதுபோன்ற கணக்குகளை வெளியேற்றி, கூடுதல் இடத்தை பெறுவது அவசியமாகிறது” என்று கூறியுள்ளார். மேலும், பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் ஆர்கைவ் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதே வேளையில், இந்த நடவடிக்கை எப்போது தொடங்கப்படும் என்ற விவரங்களை அவர் பகிரவில்லை. மேலும், இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஆர்கைவ் செய்யப்பட்ட கணக்குகளை அணுகுவது எப்படி என்பது குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ட்விட்டர் நிறுவனத்தின் வழிகாட்டு முறைப்படி, ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு முறையாவது கணக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அல்லது நீண்ட நாட்களாக அது பயன்பாட்டில் இல்லாததாக கருதப்பட்டு, ஆர்கைவ் செய்யப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu