யூடியூப் போல ட்விட்டரில் விளம்பர வருவாய் - இன்று முதல் அமல்

July 14, 2023

யூடியூப் தளத்தைப் போல, ட்விட்டர் தளத்திலும் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் வசதி அறிமுகமாகிறது. முன்னதாக, ட்விட்டர் தளத்தில், ப்ளூ டிக் அம்சம் வெளியானது. சந்தா கட்டணம் செலுத்தி, ப்ளூ டிக் பெறுபவர்களுக்கு, விளம்பரம் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதி பகிர்ந்து அளிக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது, இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. அதன்படி, தகுதி வாய்ந்த கிரியேட்டர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், ஐரோப்பா உள்ளிட்ட சில […]

யூடியூப் தளத்தைப் போல, ட்விட்டர் தளத்திலும் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் வசதி அறிமுகமாகிறது.

முன்னதாக, ட்விட்டர் தளத்தில், ப்ளூ டிக் அம்சம் வெளியானது. சந்தா கட்டணம் செலுத்தி, ப்ளூ டிக் பெறுபவர்களுக்கு, விளம்பரம் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதி பகிர்ந்து அளிக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது, இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. அதன்படி, தகுதி வாய்ந்த கிரியேட்டர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த அம்சம் வெளிவந்துள்ளது. விரைவில் உலக அளவில் விரிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் செயலி வெளியாகி உள்ளது. அதன் வெளியீட்டிலிருந்து சில தினங்களுக்குள் ட்விட்டர் பயனர்களுக்கான விளம்பர வருவாய் பகிர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu