விசாகப்பட்டினம் - மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வெடிவிபத்து

விசாகப்பட்டினம் புறநகர் பகுதியில் சாகிதீ பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இந்த ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து அந்த பகுதியை கருநிற புகை சூழ்ந்தது. தீ விபத்து நிகழ்ந்த உடன், தீயை அணைப்பதற்கு 3 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் அதிகமானோர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அத்துடன், […]

விசாகப்பட்டினம் புறநகர் பகுதியில் சாகிதீ பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இந்த ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து அந்த பகுதியை கருநிற புகை சூழ்ந்தது.

தீ விபத்து நிகழ்ந்த உடன், தீயை அணைப்பதற்கு 3 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் அதிகமானோர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அத்துடன், 2 பேர் உயிரிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி லக்ஷ்மன் ராவ், கூடுதல் தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டு, தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu