பேடிஎம் பேமென்ட் வங்கியின் செயல்பாடுகளை நிறுத்த மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பேடிஎம் பேமென்ட் வங்கியில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த 2 முக்கிய நிர்வாகிகள் விலகி உள்ளனர்.
வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி முதல், பேடிஎம் பேமென்ட் வங்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், பேடிஎம் தலைவர் பலருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அதற்குள்ளாக, வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் இருவர் வெளியேறி உள்ளனர். பேங்க் ஆப் அமெரிக்கா முன்னாள் செயல் அதிகாரி செஞ்சினி குமார் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் இணை நிர்வாக இயக்குனராக இருந்த மஞ்சு அகர்வால் ஆகியோர் வெளியேறி உள்ளனர். இது பேடிஎம் நிறுவனத்திற்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.