அமெரிக்காவில், 'ஃபென்டானில்' எனப்படும் போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்றதாக ரக்சியூடா் மற்றும் அதோஸ் கெமிக்கல்ஸ் என்ற இரு இந்திய நிறுவனங்களுக்கும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ரக்சியூடா் நிறுவனத்தின் நிறுவனா் பாவேஷி லத்தியா நியூயார்கில் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படின், 53 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அமெரிக்காவில் ஃபென்டானில் போதைப்பொருளுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் இது ஹெராயினைவிட 50 மடங்கு, மோா்பினைவிட 100 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த குற்றச்சாட்டு இந்திய நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது பதிவானது இதுவே முதல் முறையாகும்.