மேலும் 2 ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்டோரியா ஃபெடரேஷன் யுனிவர்சிட்டி மற்றும் வெஸ்டர்ன் சிட்னி யுனிவர்சிட்டி ஆகியவை இந்திய மாணவர்களுக்கு தடை விதித்துள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் பலர், படிப்பதற்காக செல்வதாக விசா பெற்று, அங்கு சென்று பணியில் சேர்வதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிகம் பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களை தடை செய்து […]

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்டோரியா ஃபெடரேஷன் யுனிவர்சிட்டி மற்றும் வெஸ்டர்ன் சிட்னி யுனிவர்சிட்டி ஆகியவை இந்திய மாணவர்களுக்கு தடை விதித்துள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் பலர், படிப்பதற்காக செல்வதாக விசா பெற்று, அங்கு சென்று பணியில் சேர்வதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிகம் பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், இதே போன்ற குற்றச்சாட்டு காரணமாக, விக்டோரியா பல்கலைக்கழகம், எடித் கோவன் பல்கலைக்கழகம், டோரண்ட் யுனிவர்சிட்டி, சதர்ன் கிராஸ் யூனிவர்சிட்டி ஆகியவை இந்திய மாணவர்களை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu