இந்தியாவில் மேலும் இரண்டு கடற்கரைகள் ப்ளூ ஃபிளாக் பட்டியலில் இணைந்துள்ளன.

October 29, 2022

இந்தியாவில் லட்சத்தீவில் உள்ள மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் கத்மத் கடற்கரை ஆகியவை ப்ளூ ஃபிளாக் கடற்கரைகளின் மதிப்புமிக்க பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் ப்ளூ ஃபிளாக் தரவரிசையின் கீழ் சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்ந்துள்ளது. Blue flag beach என்பது சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும். ப்ளூ ஃபிளாக் திட்டம் கோபன்ஹேகன், டென்மார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) மூலம் நடத்தப்படுகிறது. இது கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் […]

இந்தியாவில் லட்சத்தீவில் உள்ள மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் கத்மத் கடற்கரை ஆகியவை ப்ளூ ஃபிளாக் கடற்கரைகளின் மதிப்புமிக்க பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் ப்ளூ ஃபிளாக் தரவரிசையின் கீழ் சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்ந்துள்ளது.

Blue flag beach என்பது சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும். ப்ளூ ஃபிளாக் திட்டம் கோபன்ஹேகன், டென்மார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) மூலம் நடத்தப்படுகிறது. இது கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் நாட்டைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே 10 கடற்கரைகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது புதிதாக 2 கடற்கரைக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை கடந்த 26 ஆம் தேதி வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் ஸ்ரீ பூபேந்தர் யாதவ் தன் ட்விட்டர்பதிவு மூலம் பகிர்ந்துள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைப் பகிர்ந்து, அப்பகுதி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் டையூவில் உள்ள கோக்லா, குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், கர்நாடகாவின் காசர்கோடு மற்றும் படுபித்ரி, கேரளாவின் கப்பாட், ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசாவில் உள்ள கோல்டன், அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள ராதாநகர், தமிழ்நாட்டில் கோவளம் மற்றும் புதுச்சேரியில் ஈடன் கடற்கரைகள் ஆகியவை ஏற்கனவே blue flag பட்டியலில் இடம்பிடித்துள்ள 10 கடற்கரைகள் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu