மணிப்பூர் பயங்கரவாத தாக்குதலால் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் பலியாகினர்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இரு இன குழுக்கள் இடையே கடும் முதல் ஏற்பட்டது. இது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய கலவரமாக மாறி ஏராளமானவர் உயிரிழந்தனர். இந்த கலவரத்திலிருந்து இன்னும் மணிப்பூர் மாநில முழுமையாக விடுபடவில்லை. தற்போது வரை அடிக்கடி இந்த இரு இன மக்களும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு மணிப்பூரில் நடைபெற்றது. இதற்காக அங்கு ராணுவத்தினர் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மலையடி வார கிராமத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென அந்த முகாமில் பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. ஏராளமான துணைநிலை ராணுவத்தினர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க அந்த பகுதியில் தேர்தல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.