உகாண்டா நாட்டு உயிரியல் பூங்காவில் வெளிநாட்டு பயணிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மேற்கு பகுதியில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இது புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். ஏனெனில், இங்கு அதிக அளவிலான வனவிலங்குகள் உள்ளது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு பெரும் அளவில் கூடுவர். இந்நிலையில், இந்த பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சபாரி வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்றனர். அப்போது அங்கே பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அந்த வாகனத்தை தீ வைத்து கொளுத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டு பயணிகள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதோடு அவர்களுடன் சென்ற உள்ளூர் வழிகாட்டி ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்த அந்நாட்டு அதிபர் யோவேரி முசவேணி கண்டனம் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.














