உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியில் நீடிப்பார். இவர் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. விஷ்ணு சந்திரசூட்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்.