பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழப்பு

July 25, 2024

பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று செமி என பெயிரிடப்பட்டது. இந்தப் புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே மையம் கொண்டது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்சில் கனமழை பெய்தது. அங்கு கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழையால் முக்கிய நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மக்கள் அவதியுற்றனர். மரங்கள், […]

பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் பலியாகி உள்ளனர்.

தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று செமி என பெயிரிடப்பட்டது. இந்தப் புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே மையம் கொண்டது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்சில் கனமழை பெய்தது. அங்கு கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழையால் முக்கிய நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மக்கள் அவதியுற்றனர். மரங்கள், மின் கம்பங்கள் போன்றவை சூறைக்காற்றில் சிக்கி வேரோடு சாய்ந்தன. ஆற்று கரையோரங்களில் இருந்த 6 லட்சம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கனமழைக்கு 13 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu