ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளியால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய சூழல் காணப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் கியுஷு பகுதியில் ஷான்ஷான் என்ற சூறாவளி கரையை கடந்துள்ளது. இதனால் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று ஏற்பட்டது. இதுவரை 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஜப்பான் வானிலை ஆய்வு மையம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. சூறாவளி காரணமாக மின்விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.