ஐக்கிய அரபு அமீரக ஓபன் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் கடைசி செட்டில் யூகி பாம்ப்ரி-பாப்ரின் ஜோடி வெற்றி பெற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் மற்றும் பிரிட்டனின் ஜேமி முர்ரே உடன் மோதினர்.
இந்த ஆட்டத்தில், முதல் செட்டில் யூகி பாம்ப்ரி-பாப்ரின் ஜோடி 6-2 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது செட்டில் 6-4 என்ற புள்ளியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசிசெட்டில் 10-7 என்ற புள்ளியில் யூகி பாம்ப்ரி-பாப்ரின் ஜோடி வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.