ஏற்கனவே, விண்வெளியில் அதிக நாட்கள் தங்கும் முதல் அரபு விண்வெளி வீரர் என்ற சாதனையை சுல்தான் அல் நயாடி படைத்துள்ளார். தற்போது, மற்றொரு புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட முதல் அரபு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இன்று, இந்திய நேரப்படி அதிகாலை 1:42 மணி அளவில் தனது நடை பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். தொடர்ந்து 7 மணி நேரத்திற்கு அவரது நடை பயணம் அமைந்துள்ளது. அவருடன் சேர்ந்து மற்றொரு நாசா விஞ்ஞானியான ஸ்டீவ் பௌவன் நடை பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களின் நடைப்பயணத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான கேபிள்கள் மற்றும் இன்சுலேஷன் வேலைகள் நடத்தப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.














